குடிநீர் பிரச்சினையா...? இதோ ஜனாதிபதியிடம் இருந்து ஓர் நற்செய்தி

குடிநீர் பிரச்சினையா...? இதோ ஜனாதிபதியிடம் இருந்து ஓர் நற்செய்தி

பல மாவட்டங்களில் மக்கள் முகங்கொடுத்து வருகின்ற குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தமுறை பாதீட்டில் நிதி ஒதுக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களில் ஜனாதிபதி நாடு பூராகவும் மேற்கொண்ட பயணங்களின் போது மக்கள் முன்வைத்த குடிநீர் பிரச்சினைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான பிரச்சினை குடிநீரின் அவசியமாகும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்த பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அதனடிப்படையில் மிக முக்கிய தேவையாக கருதி குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.