சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட ஐபோன் 16 வகைகள்
அப்பிள் (Apple) நிறுவனம், சற்று முன்னர் சந்தைக்கு ஐபோன் 16 (iPhone 16) வகைகளை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
கலிபோர்னியாவில் (California) உள்ள குபெர்டினோவில் உள்ள Apple Park இல் நடைபெற்ற வருடாந்த நிகழ்வில் அப்பிள் நிறுவனம் தனது சமீபத்திய தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஐபோன் 16 வகைகளில் பயனர்களுக்கு ஏஐ திறன்களை மேலும் வழங்குவதற்கும் சாதனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் அப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) உடன் தனிப்பட்ட ஏஐ சேவைகளையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர, சமீபத்திய அப்பிள் கடிகாரம் 10 தொடர் (iwatch series 10), Air Pods 4 (AirPods 4) ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு சாதனங்களில் உலக சந்தையில் வெளியிடப்படும்.
மேலும், இவை தொடர்பான முழு விபரங்களுக்கு அப்பிள் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை நாடவும் -: https://www.apple.com/