கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கொவிட்- 19 தொற்றால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 48 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கொவிட்- 19 தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 439 பேராக ஆக அதிகரித்துள்ளது.

காத்தான்குடி, மினுவாங்கொடை, வெலிகந்தை, ஐ.டி.எச் மற்றும் இராணுவ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களே இவ்வாறு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 815 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் 365 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.