ஹக்கபட்டஸ் வெடிப்பில் காயமடைந்த யானை இன்று உயிரிழப்பு
மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் ஹக்கபட்டஸ் வெடித்ததன் காரணமாக பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்த யானை ஒன்று இன்று உயிரிழந்துள்ளது.
கெகிராவ பகுதியில் உள்ள விவசாய நிலமொற்றில் வைத்து குறித்த யானை இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த யானை சுமார் 6.5 அடி உயரம் கொண்டதோடு இது சுமார் 15 வயதைக் கொண்டிருக்கலாம் எனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கலாவெவ தேசிய பூங்காவில் உள்ள குறித்த யானையின் காயத்திற்கு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிகிச்சை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.