குளவி கொட்டு இலக்கான 14 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டு இலக்கான 14 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 14 பெண் தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தற்போது டிக்கோயா ஆதார மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நோர்டன் பிரிட்ஜ்-ஒஸ்போன் தோட்டம்-க்ரவென்டன் பிரிவில் இடம்பெற்றுள்ளது குளவி கூடு ஒன்று கலைந்ததன் காரணமாகவே இவ்வாறு குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தெரிவித்தனர்.