யாழ் மிருசுவில் 8 பேர் கொலை சம்பவம் ; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

யாழ் மிருசுவில் 8 பேர் கொலை சம்பவம் ; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

யாழ்ப்பாணம் மிருசுவில் 8 பேர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மீதான அடிப்படை உரிமை மனுக்களை ஜனவரி 15 ஆம் திகதி பரிசீலிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

யாழ் மிருசுவில் 8 பேர் கொலை சம்பவம் ; நீதிமன்றம் விடுத்த உத்தரவு | 8 People Killed In Jaffna Mirusuvil Court Order

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி அம்பிகா சத்குணநாதன் ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், சம்பந்தப்பட்ட மனுவில் எதிர்மனுதாரர்கள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.