யாழில் பெரும் சோக சம்பவம்... இளம் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த நிலை!

யாழில் பெரும் சோக சம்பவம்... இளம் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த நிலை!

யாழ்ப்பாணத்தில் அதிக வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண் ஒருவர் அதனை மீளச் செலுத்த முடியாத கார்ணத்தால் விபரீத  முடிவெடுத்து உயிர்மாய்த்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் யாழ்.ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சயந்தன் கேதீசா என்ற 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் பெரும் சோக சம்பவம்... இளம் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த நிலை! | Young Family Woman Wrong Decision Died In Jaffna

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண் மீற்றர் வட்டிக்கு கடன் பெற்று கடை ஆரம்பித்ததையடுத்து வியாபாரம் இல்லாத நிலையில் கடையினை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், வாங்கிய கடனை செலுத்த மீளச் முடியாமையினால், கடன் வழங்குனர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

யாழில் பெரும் சோக சம்பவம்... இளம் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த நிலை! | Young Family Woman Wrong Decision Died In Jaffna

இதனைதொடர்ந்தே நேற்றையதினம் (30-08-2024) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.