இலங்கையின் அண்டை நாட்டில் ஆழ்ந்த காற்றழுத்தம்! 28 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

இலங்கையின் அண்டை நாட்டில் ஆழ்ந்த காற்றழுத்தம்! 28 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.

இந்தக் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30,000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் அண்டை நாட்டில் ஆழ்ந்த காற்றழுத்தம்! 28 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | Deep Depression In Gujarat Weather Report India

இவ்வாறான நிலையில், குஜராத்தில் ஆழ்ந்த காற்றழுத்தம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றையதினம் (29-08-2024) அரபிக்கடலில் கலக்கும் என்றும், நாளைக் கடற்கரையை விட்டு நகரும்போது சற்று வலுவடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுமா இல்லையா என்பது தொடர்பில் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிடவில்லை.