“இராணுவத்தினர் அச்சுறுத்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் கூறிவரும் கருத்துக்கள் தேர்தல் வெற்றிக்கான உத்தி”

“இராணுவத்தினர் அச்சுறுத்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் கூறிவரும் கருத்துக்கள் தேர்தல் வெற்றிக்கான உத்தி”

இராணுவத்தினர் அச்சுறுத்துவது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் கூறிவருவதானது தேர்தல் வெற்றிக்கான உத்தியே என அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வர்த்தகர்கள் மத்தியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அங்கயன் இராமநாதனிடம் ஊடகவியலாளர் குறித்த விடயம் தொடர்பாக வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தமது வெற்றிக்காக ஒவ்வொரு உத்திகளை பயன்படுத்துவார்கள். அது போன்றதாகவே அவர் இவ்வாறான உத்தியை பயன்படுத்துகின்றார்.

அவருடைய சம்மந்தி ஊடாக நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. இவ்வாறான நிலையில் தமக்கு அச்சுறுத்தல் இருப்பது தொடர்பாக கருத்துக்களை கூறி தமது கட்சிக்கான வெற்றிக்கு அவர் பயன்படுத்தும் உத்தியாகவே பார்க்கின்றேன். மக்கள் இதனை நன்கு அறிவார்கள்” என கூறினார்