இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை மற்றும் உப்பில் காத்திருந்த அதிர்ச்சி
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை மற்றும் உப்பில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில், Toxics Link என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்பு, கடைகள் மற்றும் ஒன்லைன் மூலமாக வாங்கிய சர்க்கரை மற்றும் உப்பு வகைகளை ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கையை தயாரித்துள்ளது.
குறித்த அறிக்கையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து பிராண்ட் சர்க்கரை மற்றும் உப்பில், நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1 கிலோ தூள் உப்பான அயடின் கலந்த உப்பில் 89.15 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், 1 கிலோ கல் உப்பான ஆர்கானிக் உப்பில் 6.70 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் காணப்பட்டுள்ளன.
இதேவேளை, 1 கிலோ ஆர்கானிக் சர்க்கரையில் 11.85 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், 1 கிலோ ஆர்கானிக் அல்லாத சர்க்கரையில் 68.25 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் காணப்பட்டுள்ளன.