
“நான் எனது உயிரையும் தியாகம் செய்வேன்” முன்னாள் இராணுவ அதிகாரி தெரிவிப்பு
இறுதி யுத்தத்தின் போது தமிழர்கள் பாரிய அளவில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிடும் முன்னாள் இராணுவ அதிகாரி ரத்னப்பிரிய பந்து தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
யுத்த குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் குற்றவாளிகளை நாட்டின் சட்டத்தின் கீழ் விசாரணை செய்ய வேண்டும். ஆனால் நாங்கள் மனிதாபிமான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டோம்.
படையிலிருந்த சிலர் இன்னமும் சிறைகளில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் அவர்கள் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டால் அவர்களை தண்டிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் சமாதானம், ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றிற்காக குரல்கொடுக்கவேண்டும். நான் அதற்காக எனது உயிரை தியாகம் செய்வேன் என குறிப்பிட்டுள்ளார்.
சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்கள் ஒருபோதும் யுத்தத்தை கோரவில்லை. அவர்கள் ஐக்கியத்துடன் வாழவே விரும்பினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் வெளிநாடுகளின் சின்னத்தனமான வெளிநாட்டு நிகழ்ச்சிநிரலை எதிர்கொண்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.