ஆனையிறவு பகுதியில் கோர விபத்து - ஒருவர் பலி - மூவர் காயம்

ஆனையிறவு பகுதியில் கோர விபத்து - ஒருவர் பலி - மூவர் காயம்

கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் இன்று (09.08.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிளும் இன்று(09) அதிகாலை ஆனையிறவு பகுதியில் ஒன்றின்பின் ஒன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி | One Died In Accident In Kilinochchiவிபத்தின் போது, ஒரு மோட்டார் சைக்களில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் ஏனைய மூன்று பேரும் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.