யாழில் இடம்பெற்ற வன்முறை: மூன்று சந்தேகநபர்கள் கைது

யாழில் இடம்பெற்ற வன்முறை: மூன்று சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வீடுகள் மீது தாக்குதல் நடத்தி எரித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதான மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், இரண்டு வாள், நான்கு பெட்ரோல் குண்டுகள் என்பனவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடுகள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பாகவே குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழில் இடம்பெற்ற வன்முறை: மூன்று சந்தேகநபர்கள் கைது | Three Arrested Attack And Burning Houses In Jaffnaவெளிநாட்டில் உள்ள ஒருவர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தப்பி சென்ற மற்றொருவர் மூலம் உள்நாட்டில் உள்ள நிஷா விக்டர் என்ற நபருக்கு பணத்தை வழங்கி குறித்த தாக்குதல்களை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.