யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டவர் கைது

யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna)- கொழும்புத்துறை பகுதியில் கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (07) முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இதன்போது 227 போத்தல் கோடாவும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டவர் கைது | A Person Was Arrested For Selling Liquor In Jaffnaகுறித்த சந்தேக நபர் கொழும்புத்துறையிலும் வட்டுக்கோட்டையிலும் வீடுகளை வாடகைக்கு எடுத்து கசிப்பு காய்ச்சி பல இடங்களில் விற்பனையில் ஈடுபட்டாரென காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.