யாழில் இடம்பெற்ற பணமோசடி: தட்டிக் கேட்டவர்களுக்கு நேர்ந்த அவலம்

யாழில் இடம்பெற்ற பணமோசடி: தட்டிக் கேட்டவர்களுக்கு நேர்ந்த அவலம்

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்தவர் மீது தாக்குதல் நடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்னர்.

குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று (06) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ் (France) நாட்டிற்கு செல்வதற்காக 25 இலட்சம் ரூபா பணத்தினை நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் சிங்கப்பூர் (Singapore) வரையில் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டதுடன், மீண்டும் அவர் இலங்கைக்கு (Sri Lanka) திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பணத்தினை கொடுத்து ஏமாந்த நபரும் அவரது சகோதரனும், நீர்கொழும்பை (Negombo) சேர்ந்த நபரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து தாக்குதல் நடாத்தி அவரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுக் கொண்டனர்.

அந்தவகையில், பாதிக்கப்பட்ட நபர் மானிப்பாய் (Manipay) காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், தாக்குதலை நடாத்திய இருவரும் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழில் இடம்பெற்ற பணமோசடி: தட்டிக் கேட்டவர்களுக்கு நேர்ந்த அவலம் | Fraudster Attacked Over 2 5 Million Scam In Jaffnaஇந்நிலையில் அவர்கள் இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.