தமிழர் தாயகத்தில் உள்ள இராணுவ வீதி தடையினால் ஏற்பட்ட விபத்து
வடக்கில் தமிழர் வாழ் இடங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் பல வீதித்தடைகள் அகற்றப்பட்ட போதும் பூநகரி-யாழ்ப்பாணம் வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் உள்ள இராணுவ வீதித்தடை அகற்றப்படாத நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக வடக்கில் ஓமந்தை, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல வீதித்தடைகள் அகற்றப்பாட்டாலும் ஆனையிறவு, மற்றும் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் உள்ள இராணுவ வீதி தடைகள் அகற்றப்படாத நிலை காணப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று (02.08.2024) மாலை வைக்கோல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் ஒன்று இராணுவ வீதித் தடையினை விலகி செல்ல முற்பட்ட போது தடம் புரண்டு விபத்தினை சந்தித்துள்ளது.
குறித்த விபத்தின் போது வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.
இந்த விபத்தினை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் வீதி ஊடான போக்குவரத்தினை இராணுவத்தினர் நிறுத்தி வைத்திருந்த நிலையில் அதன் பின்னர் வீதிப்போக்குவரத்து பொலிஸார் வந்து போக்குவரத்தினை சீர்செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.