யாழ் - கண்டி வீதியில் விபத்து: ஒருவர் பலி - இருவர் காயம்
யாழ் (jaffna) - கண்டி பிரதான வீதியின் நுணாவில் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு (01) 8.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் 56 வயதான பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியோரத்தில் நடந்து சென்ற பாதசாரிகள் இருவர் மீது மோதியுள்ளது.
விபத்தில் பாதசாரிகள் இருவரும் மோட்டார் சைக்கிள் ஒட்டுனரும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.