யாழில் பெரும் சோகம்... வீதியில் மயங்கி விழுந்த நபர் பரிதாபமாக உயரிழப்பு!

யாழில் பெரும் சோகம்... வீதியில் மயங்கி விழுந்த நபர் பரிதாபமாக உயரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் உள்ள வீதியொன்றில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கடற்கரை வீதி, ஈச்சமோட்டை, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் வசித்து வந்த க.கியூமர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் பெரும் சோகம்... வீதியில் மயங்கி விழுந்த நபர் பரிதாபமாக உயரிழப்பு! | Old Man Fainted On The Street In Jaffna Diedஇச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 27ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வு ஒன்றுக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் கடற்கரை வீதியூடாக வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.

இதன்போது அவருக்கு திடீரென தலைச்சுற்று ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்.

யாழில் பெரும் சோகம்... வீதியில் மயங்கி விழுந்த நபர் பரிதாபமாக உயரிழப்பு! | Old Man Fainted On The Street In Jaffna Died

இந்நிலையில் 27ஆம் திகதி இரவு 8 மணிக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

பரிசோதனையில் தலையில் அடிபட்டதாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.