மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொடூர கொலை

மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொடூர கொலை

மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொடூரமாக கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிங்கிரிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட மேல் கடிகமுவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேல் கடிகமுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையுண்ட பெண், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கணவனால் பலமுறை தாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொடூர கொலை | The Husband Brutally Murdered His Wifeதகராறு காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு மனைவி சென்றுள்ளார்.

பின்னர் அந்த வீட்டில் இருந்து குளிக்கச் சென்றபோது, ​​கணவன் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிக்க பிங்கிரிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.