அர்ச்சுனாவுக்கு ரணிலுக்கும் இடையே விசேட சந்திப்பு ; அதிர்ச்சி தரும் மற்றுமொரு தகவல்

அர்ச்சுனாவுக்கு ரணிலுக்கும் இடையே விசேட சந்திப்பு ; அதிர்ச்சி தரும் மற்றுமொரு தகவல்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த சந்திப்பானது இன்றைய தினம்(14.07.2024) இடம்பெறவுள்ளது.

அர்ச்சுனாவுக்கு ரணிலுக்கும் இடையே விசேட சந்திப்பு ; அதிர்ச்சி தரும் மற்றுமொரு தகவல் | Special Meeting Between Archuna And Ranil

வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா வடக்கு சுகாதாரத் துறையில் காணப்பட்ட பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி இருந்த நிலையில், அது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

அத்துடன், நேற்றையதினம் (2024.07.13) அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை வைத்தியர் அர்ச்சுனா சந்தித்து பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அறிய முடிகிறது.

மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் மக்கள் தமது பிரச்சினைகளை அவர்களிடத்தில் நேரடியாக எழுத்து மூலமாக தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.