24 மணிநேரத்தில் மூவர் படுகொலை : இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள்

24 மணிநேரத்தில் மூவர் படுகொலை : இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள்

கடந்த 24மணி நேரத்தில் நாட்டில் நடைபெற்ற 03 கொலைகள் தொடர்பில் காவல்துறை ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று (12) அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் கடந்த (12) ஆம் திகதி காலை பொதுப்பிட்டிய ரம்புக, பின்னகொடெல்ல பிரதேசத்தில் ஒரு கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வீடொன்றுக்கு அருகில் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபர் அயல் வீட்டில் வசித்த பெண்ணிடம் தகாத முயற்சியை மேற்கொண்டதால் குறித்த பெண்ணின் கணவர் மேலும் இருவர் குறித்த நபரை தடியால் அடித்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

24 மணிநேரத்தில் மூவர் படுகொலை : இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள் | Murders Have Been Reported The Police Media Unit

ரபுக்க, ரக்வான பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சந்தேகநபர்கள் 28 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும் அதே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொத்துப்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று (12) இரவு, ரத்கம, ரணபனாதெனிய பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

24 மணிநேரத்தில் மூவர் படுகொலை : இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள் | Murders Have Been Reported The Police Media Unit

ரத்கம பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் தென்னை வியாபாரி எனவும், வெளிநாட்டில் உள்ள தனது இளைய சகோதரரின் மூடிய வீட்டில் வசித்து வந்த நிலையில், அவரை யாரோ தேங்காய் உரிக்கும் கருவியால் குத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைக்கான காரணமோ அல்லது கொலையை செய்தவர்களோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிவையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.