குறையப்போகும் மின்கட்டணம் : மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

குறையப்போகும் மின்கட்டணம் : மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

 மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணக் குறைப்பு எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உத்தேச கட்டண திருத்தத்தின் காரணமாக உள்நாட்டு மின் கட்டணங்கள் 30 வீதத்தாலும், பொது மின் கட்டணம் 13 வீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறையப்போகும் மின்கட்டணம் : மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Electricity Charges Reduced

திருத்தத்தின் கீழ், 40 லட்சத்துக்கும் அதிகமான மின் நுகர்வோர்களுக்கும், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சிறு கைத்தொழில்களுக்கும் சலுகைகள் வழங்கப்படும் என்று மின்சார சபை கூறுகிறது.

குறையப்போகும் மின்கட்டணம் : மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Electricity Charges Reduced