யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த பேருந்தில் வாள்வெட்டு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த பேருந்தில் வாள்வெட்டு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ் - அரியாலை (Ariyalai) பகுதியில் பேருந்து பயணித்த இருவர் பேருந்து சாரதி மீதும் பயணி ஒருவர் மீதும் வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (12.7.2024) மாலை யாழ்ப்பாணம் (jaffna) அரியாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

எனினும் வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஏ9 வீதியில் சித்துப்பாத்தி மயானத்திற்கு முன்பாக கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த பேருந்தில் வாள்வெட்டு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி | Swords Attack Bus Driver And Passenger In Jaffna

கைதடி பகுதியில் பேருந்தில் ஏறிய இருவர் அரியாலையில் இறங்கிய போது நடத்துநருடன் முரண்பட்டுள்ளனர். இதில் நியாயம் கேட்க சென்ற சாரதி மற்றும் பயணி மீதே வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.