நுவரெலியாவில் பேருந்து விபத்து - 42 இற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியாவில் பேருந்து விபத்து - 42 இற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது

இந்த விபத்தில் - 42 இற்கு மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் இன்று (11) அதிகாலை நுவரெலியா கண்டி வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவில் பேருந்து விபத்து - 42 இற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி | Nuwaraeliya Kandy Bus Accident 

இந்த விபத்து காரணமாக நுவரெலியா கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவிலிருந்து சுற்றுலா சென்ற அதிசொகுசு தனியார் பேருந்து பாதையை விட்டுவிலகி அருகில் இருந்த பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது

நுவரெலியாவில் பேருந்து விபத்து - 42 இற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி | Nuwaraeliya Kandy Bus Accident

குறித்த விபத்தின் போது பேருந்தில் பயணம் செய்த சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 42 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.