மலேசியாவில் பாலம் இடிந்து விழுந்து 32 பேர் பலியான நாள்: 31-7-1988

மலேசியாவில் பாலம் இடிந்து விழுந்து 32 பேர் பலியான நாள்: 31-7-1988

மலேசியாவின் பெனாங் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது. இதில் 32 பேர் பலியானார்கள். 1634 பேர் காயம் அடைந்தனர். இதே தேதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:- * 1865 - உலகின் முதலாவது குறுகிய அகல ரெயில் பாதை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

 

மலேசியாவின் பெனாங் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது. இதில் 32 பேர் பலியானார்கள். 1634 பேர் காயம் அடைந்தனர்.

இதே தேதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1865 - உலகின் முதலாவது குறுகிய அகல ரெயில் பாதை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

* 1938 - கிரேக்கம், துருக்கி, ருமேனியா, யுகோசுலாவியா ஆகிய நாடுகளுடன் பல்கேரியா அமைதி உடன்பாட்டிற்கு வந்தது.

* 1954 - ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலிய குழு ஒன்று கே-2 கொடுமுடியை எட்டியது.

* 1964 - சந்திரனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

* 1971 - அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர். * 1976 - வைக்கிங் 1 விண்கலத்தினால் செவ்வாய்க் கோளில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மனித முகம் படத்தை நாசா வெளியிட்டது

* 1987 - ஆல்பர்ட்டா மாநிலத்தில் எட்மன்டன் நகரில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.

* 1992 - நேபாள தலைநகர் காத்மாண்டில் தாய்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் 113 பேர் பலியானார்கள்.

* 2006 - பிடெல் காஸ்ட்ரோ தனது அதிகாரத்தை தற்காலிகமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

* 2006 - ஈழப்போர்: திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

*  2007 - வட அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.