உயர்தர மாணவனை தாக்கிய அதிபர் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் கைது

உயர்தர மாணவனை தாக்கிய அதிபர் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் கைது

நுவரெலியா காமினி தேசிய பாடசாலையின் உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் மாணவனை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் பாடசாலை அதிபர், இரண்டு பிக்குகள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் உட்பட ஆறு சந்தேகநபர்கள் (08) இன்று கைது செய்யப்பட்டதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த (03) ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற போது, ​​மாணவனின் தலைமுடி அதிகமாக வளர்ந்திருந்த காரணத்தினால், அதிபர் அவரைத் தாக்கியுள்ளார் .

அத்துடன் இரண்டு பிக்குகள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இணைந்து மாணவனை தாக்கியதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயர்தர மாணவனை தாக்கிய அதிபர் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் கைது | Principal And Teachers Attacked A Student

பெற்றோரின் முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் ஐந்து ஆசிரியர்களையும் நுவரெலியா காவல்துறையினர் (08) கைது செய்து நுவரெலியா நீதவான்  பிரபுத்திகா லங்கந்தி முன்னிலையில் முற்படுத்திய போது, ​​இந்த வழக்கை அடுத்த மாதம் (26) அழைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  

உயர்தர மாணவனை தாக்கிய அதிபர் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் கைது | Principal And Teachers Attacked A Student