மன்னாரில் பெரும் சோக சம்பவம்... தந்தையின் கவனக்குறைவால் பறிப்போன சிறுமியின் உயிர்!

மன்னாரில் பெரும் சோக சம்பவம்... தந்தையின் கவனக்குறைவால் பறிப்போன சிறுமியின் உயிர்!

மன்னார் பகுதியில் தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்றிரவு (13-06-2024) 7 மணியளவில் மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் பெரும் சோக சம்பவம்... தந்தையின் கவனக்குறைவால் பறிப்போன சிறுமியின் உயிர்! | Mannar Daughter Dies Stuck Tractor Drive Father

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பூவரசங்குளம் பகுதியில் உள்ள விவசாயியான தந்தை ஒருவர் தனது வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுது கொண்டிருந்தார்.

இதன் போது உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த அவரது 8 வயதுடைய மகள் திடீரென கீழே விழுந்த நிலையில் உழவு இயந்திரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மன்னாரில் பெரும் சோக சம்பவம்... தந்தையின் கவனக்குறைவால் பறிப்போன சிறுமியின் உயிர்! | Mannar Daughter Dies Stuck Tractor Drive Father

குறித்த சிறுமியின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.