காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்ற இளைஞன் மரணம்

காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்ற இளைஞன் மரணம்

கண்டி திருத்துவக் கல்லூரி ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய 19 வயதான இளைஞன் திடீர் மரணமடைந்துள்ளார். 

ஷபீர் அஹமட் என்ற இளைஞன் கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். 

நுரையீரலில் கிருமிகள் புகுந்ததால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த போது தவறி விழுந்ததில் காலில் ஏற்பட்ட காயம் மோசமடைந்துள்ளது.

சில நாட்களின் பின்னர் குறித்த மாணவன் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சிகிச்சையின் பின்னர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மாணவனின் பெற்றோர் அவரை கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கு நுரையீரலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்ததையடுத்து சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.

காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்ற இளைஞன் மரணம் | Sri Lanka Rugby Player Shabeer Ahamed Passes Awayகல்லூரியின் ஆதரவுடன் விசேட சிகிச்சைக்காக விமானப்படையின் ஹெலிகொப்டர் மூலம் மாணவன் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.