இளைஞன் ஒருவரை கொடூரமாக கொலை செய்த பெண்கள்

இளைஞன் ஒருவரை கொடூரமாக கொலை செய்த பெண்கள்

மொனராகலை பிரதேசத்தில் காதலனை தாக்கி வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் காதலியும், அவரது இரண்டு சகோதரிகள் மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

29, 32 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்களும், 25 வயதுடைய ஒரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக ஒருவர் விஷம் குடித்து மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கினர்.

இளைஞன் ஒருவரை கொடூரமாக கொலை செய்த பெண்கள் | Man Killed By 3 Women In Monaragala

பிரேத பரிசோதனை போது அது திட்டமிட்ட கொலை என்று தெரியவந்ததாகவும் வலுக்கட்டாயமாக விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.