யாழில் சீரழியும் இளம் சமூகம்; நால்வர் கைது

யாழில் சீரழியும் இளம் சமூகம்; நால்வர் கைது

யாழ்ப்பாண நகர் பகுதியில் நேற்று (29) நான்கு இளைஞர்கள் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து ஏழு போதை மாத்திரைகள் மற்றும் 90 மில்லிகிராம் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன.

யாழில் சீரழியும் இளம் சமூகம்; நால்வர் கைது | Four Youths Arrested With Drugs In Jaffna City

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.