அதிரடியாக குறைந்த தங்கம் விலை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

இன்று (23) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளமை நகை வாங்க காத்திருந்தோடுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதத்தில் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி! | Dramatically Low Gold Prices Housewives Rejoice

இந்நிலையில் , சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.6,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.30 குறைந்து ரூ.97-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி! | Dramatically Low Gold Prices Housewives Rejoiceஅதேவேளை   அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்து அதிர்ச்சியளித்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (21) தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில், நேற்று விலையில் மாற்றிமின்றி விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.