நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் சொகுசு கார் விபத்து : நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் சொகுசு கார் விபத்து : நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியின் நானுஓயா (Nanuoya) டெஸ்போட் பகுதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்தது வீதியோரத்தில் உள்ள கற்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது (15.05.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது விபத்தில் நால்வர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி - அக்குரணை பகுதியில் இருந்து நுவரெலியாவிற்கு வருகைத்தந்து நானுஓயா டெஸ்போட் வழியாக கொழும்பு நோக்கி சென்ற சொகுசு கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடது பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டு கற்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் சொகுசு கார் விபத்து : நால்வர் வைத்தியசாலையில் அனுமதி | Luxury Car Accident At Nanu Oya Despotசம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.