சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு இலவச புள்ளிகள்: வெளியானது அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு இலவச புள்ளிகள்: வெளியானது அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞான வினாத்தாளின் இரண்டு கேள்விகளுக்கு இலவச புள்ளிகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

 பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று(15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு இலவச புள்ளிகள்: வெளியானது அறிவிப்பு | Free Points For Ordinary Level Exam Studentsவிஞ்ஞான வினாத்தாளின் 09 மற்றும் 39 ஆகிய வினாக்களுக்கு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞான பாட வினாத்தாள், பாடத்திட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.