தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: இன்றைய நிலவரம்

தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: இன்றைய நிலவரம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது இன்றையதினம்(15) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 710,638 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 25,070 ரூபாவாக பதிவாகியுள்ளது.

today gold price

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams)22,990 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 183,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 21,940 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம் 175,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.