இலங்கையில் டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

நாட்டில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி இலங்கை மத்திய வங்கி இன்று(13) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் | Changes In The Value Of The Dollar In Sri Lankaஇன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 15 சதமாக பதிவாகியுள்ளது.

அதேசமயம் கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 72 சதமாகக் காணப்பட்டது.

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 78 சதமாக பதிவாகியுள்ளது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 38 சதமாகக் காணப்பட்டது.