அரச வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

அரச வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

சப்ரகமுவ மாகாணத்தில் ( Sabaragamuwa province) காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த தகவலை சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் சாமர பமுனு ஆரச்சி (Samara Pamunu Arachi) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

சப்ரகமுவ மாகாணத்தில் 1,080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக சாமர பமுனு ஆரச்சி  சுட்டிக்காட்டி உள்ளார்.

அரச வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல் | Government Teacher Vacancies Ministry Of Educationஅந்தவகையில், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கையின்  முதற்கட்டமாக, 425 பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க ஆரம்பப்பிரிவுக்கு 877 ஆசிரியர்களும் கனிஷ்டப்பிரிவுக்கு 159 ஆசிரியர்களும் நியமிக்கப்படவுள்ளனர் அவர் குறிப்பிட்டுள்ளார்.