மரண வீட்டில் ஏற்பட்ட விபரீதம் : ஒருவர் பலி - நால்வர் காயம்

மரண வீட்டில் ஏற்பட்ட விபரீதம் : ஒருவர் பலி - நால்வர் காயம்

நிட்டம்புவ திஹாரிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரும் மேலும் நால்வரும் இணைந்து அப்பகுதியில் உள்ள மரண வீட்டின் வீதியில் மின் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது  விபத்து ஏற்பட்டுள்ளது. 

வீதியில் இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் மின் விளக்குகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கம்பி மோதியதில் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

திஹாரிய கல்கெடிஹேன பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

மின்சாரம் தாக்கிய ஏனைய நால்வரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.