நடு வீதியில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி

நடு வீதியில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி

நுவரெலியா(nuwara eliya) - ஹட்டன்(hatton) பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.

நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணம் மேற்கொண்ட போதே முச்சக்கர வண்டியொன்றே இவ்வாறு தீ பிடித்து எரிந்துள்ளது.

முச்சக்கரவண்டியினை வீதியோரத்தில் நிறுத்தி விட்டு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு சென்று உணவு பொருட்கள் கொள்வனவு செய்து கொண்டு வந்து மீண்டும் முச்சக்கர வண்டியினை இயக்க முற்பட்ட போது திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

நடு வீதியில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி | Threewheel Caught Fire Suddenly In Nuwara Eliyaதீ பிடித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இயந்திரப் பகுதியில் பெட்ரொல் கசிவு ஏற்பட்டு தீப் பிடித்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் முச்சக்கர வண்டியில் தீ பற்றி எரிவதை அவதானித்த பிரதேசவாசிகள் வியாபாரிகள் ஒன்றிணைந்து நீர் ஊற்றி அணைக்க முயன்ற போது முச்சக்கர வண்டியின் முழுப் பகுதியிலும் தீ பரவி முற்றிலும் சேதமடைந்துள்ளது.

நடு வீதியில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி | Threewheel Caught Fire Suddenly In Nuwara Eliyaகுறித்த தீ விபத்தால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன் முச்சக்கர வண்டி முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நானுஓயா காவல்துறையினர்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.