உடலுறவு கொள்ளாமல் கர்ப்பம் தரித்த சிறுமி; குழப்பத்தில் மருத்துவர்கள்

உடலுறவு கொள்ளாமல் கர்ப்பம் தரித்த சிறுமி; குழப்பத்தில் மருத்துவர்கள்

உடலுறவு கொள்ளாமல் கர்ப்பம் தரித்த 13 வயது சிறுமி மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குருணாகல், ஹெட்டிப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியே இவ்வாறு கர்ப்பம் தரித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் வைத்தியர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

எனினும் இது தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்காததால் சிறுமி மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வயிற்று வலியினால் அவதிப்பட்டுள்ள நிலையில் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே சிறுமி கர்ப்பமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உடலுறவு கொள்ளாமல் கர்ப்பம் தரித்த சிறுமி; குழப்பத்தில் மருத்துவர்கள் | A Girl Who Got Pregnant Without Having Sexஇந்நிலையில், மேலதிக பரிசோதனைகளில் பாதிக்கப்பட்ட சிறுமி உடலுறவு கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.