கட்டுமானப் பொருட்களை நியாயமான விலையில் வழங்க புதிய திட்டம்..!

கட்டுமானப் பொருட்களை நியாயமான விலையில் வழங்க புதிய திட்டம்..!

மக்களுக்கு நியாயமான விலையில் கட்டுமானப் பொருட்களை வழங்குவதற்கு விலை சூத்திரம் போன்ற "மதிப்பீட்டு விலை வரம்பை" வர்த்தக அமைச்சகம் அறிமுகப்படுத்தவுள்ளது.

அதன்படி சிமெந்து(cement), வர்ணப்பூச்சு(paint) ,உருக்கு கம்பிகள் (steel) மற்றும் மின் வயர்கள் (electrical wires) உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு மதிப்பிடப்பட்ட விலை வரம்பு அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கம், நிதி அமைச்சகம், நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் மற்றும் வர்த்தக அமைச்சகம் ஆகியவை இறக்குமதி வரிகள், சுங்க வரிகள் மற்றும் பிற இறக்குமதி கட்டணங்களை கருத்திற்கொண்டு புதிய விலை வரம்பை அங்கீகரித்துள்ளன.

அதன் பிறகு, நுகர்வோர் குறிப்பிட்ட பொருளின் உண்மையான விலையை அடையாளம் காண முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஏற்கனவே மதிப்பிடப்பட்ட விலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விலை வரம்பு புதுப்பிக்கப்படும்.

கட்டுமானப் பொருட்களை நியாயமான விலையில் வழங்க புதிய திட்டம் | New Price Formula For Construction Materialsஇதேவேளை ஒரு வர்த்தகர் நியாயமற்ற விலையை நிர்ணயிக்கும் போது, நுகர்வோர் விவகார ஆணையத்திடம் புகார் செய்யலாம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வர்த்தகர்கள் அதிக லாபம் ஈட்டுகிறார்களா என்ற தகவலையும் நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.