வாகன இறக்குமதி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை!!

வாகன இறக்குமதி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை!!

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்யும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் விசேட கோரிக்கை கடிதமொன்றில் ஆளும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

பின்வரிசை உறுப்பினர்களைப் போன்றே சிரேஸ்ட உறுப்பினர்களும் இந்த ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

கட்சித் தலைவர் கூட்டத்தில் இதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதன் அடிப்படையில் அண்மையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வாகன இறக்குமதி கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை | Mps Reqesting Tax Free Vehiclesஇந்த யோசனைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலையில் இவ்வாறு வாகனம் கொள்வனவு செய்வதற்கு நிதியை செலவிடுவது பொருத்தமற்றது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, தேர்தலுக்கு முன்னர் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.