இரண்டு இலட்சத்தை தொடும் தங்கத்தின் விலை: நகை வாங்கவுள்ளவர்களுக்கான முக்கிய தகவல்!!

இரண்டு இலட்சத்தை தொடும் தங்கத்தின் விலை: நகை வாங்கவுள்ளவர்களுக்கான முக்கிய தகவல்!!

22 கரட் தங்கப் (Gold) பவுணொன்றின் விலை 184,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று (16.04.2024) இந்த விலை பதிவாகியுள்ளது. 

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 25,160 ரூபாவாக உள்ளது. 

இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 201,300 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,070 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 184,550 ரூபாவாகவும் காணப்படுகிறது.

gold price in srilanka todayமேலும், 21 கரட் 1 கிராம் தங்கம் 22,020 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 176,150 ரூபாவாகவும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தங்கத்தின் விலையானது இரண்டு இலட்சத்தை தொட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தங்கத்தின் விலையில் வரலாறு காணாத அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.