முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு!

முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு!

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலமான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன.
 

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்த நிலையில், முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

எவ்வாறாயினும், இஸ்லாமிய பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகளை எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.