பூமியை குளிர்விக்க... சூரிய ஒளியை திருப்பி விண்வெளிக்கே அனுப்ப மாபெரும் திட்டம்!

பூமியை குளிர்விக்க... சூரிய ஒளியை திருப்பி விண்வெளிக்கே அனுப்ப மாபெரும் திட்டம்!

கடந்த 2023 ஆண்டு தான் பூமி அதன் வெப்பமான ஆண்டை பதிவு செய்தது. எதிர்வரும் காலங்களில் பூமியில் பதிவாகும் வெப்பம் மேலும் மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.

இதனால் பூமியின் வெப்பத்தைக் குறைக்க ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பூமியை குளிர்விக்க... சூரிய ஒளியை திருப்பி விண்வெளிக்கே அனுப்ப மாபெரும் திட்டம்! | Send Sunlight Back To Space To Cool The Earth

இதேவேளை, பூமியைத் தற்காலிகமாகக் குளிர்விக்க புதிய வழி ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் முன்மொழிந்துள்ளனர்.

அதாவது சூரியனில் இருந்து வரும் சில கதிர்களை மீண்டும் விண்வெளிக்குத் திருப்பி அனுப்புவதே இந்தத் திட்டமாகும்.

இதற்காக அவர்கள் கிளவுட் ப்ரைட்டனிங் என்ற முறையைப் பயன்படுத்துகிறார்களாம். இது மேகங்களைப் பிரகாசமாக்கும் ஒரு முக்கிய தொழில்நுட்பமாகும்.

பூமியை குளிர்விக்க... சூரிய ஒளியை திருப்பி விண்வெளிக்கே அனுப்ப மாபெரும் திட்டம்! | Send Sunlight Back To Space To Cool The Earth

இந்த மேகங்கள் சூரிய ஒளியின் ஒரு சிறிய பகுதியை மீண்டும் விண்வெளிக்கே திரும்பி அனுப்பிவிடுமாம். இதன் காரணமாகப் பூமியின் ஒரு பகுதி வெப்பம் கணிசமாகக் குறையும்.

இந்த தொழில்நுட்பம் முழுமையாக வெற்றி அடைந்தால் அது மிகப் பெரிய திருப்பும்னையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லையென அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி இது தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.