சாரதி ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் : மகிழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவன்

சாரதி ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் : மகிழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவன்

நீர்கொழும்பில் (Negombo) இருந்து கண்டி (Kandy) செல்லும் பேருந்தில் கையடக்க தொலைபேசியை விட்டு சென்ற மாணவனை தேடி ஒப்படைத்த பேருந்து சாரதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

மாவனல்லையில் (Mavanalla) தனியார் பல்கலைக்கழகம் செல்வதற்காக நீர்கொழும்பில் இருந்து கண்டி செல்லும்  பேருந்தில் ஏறிய  மாணவன் தனது கையடக்க தொலைபேசியை மறந்து விட்டு சென்றுள்ளார்.

கையடக்க தொலைபேசி தொலைந்து போனதை அறிந்த மாணவன், தனது நண்பரின் கையடக்க தொலைபேசியில் இருந்து அழைத்தபோது, ​​சாரதி தன்னிடம் கையடக்க தொலைபேசி இருப்பதாகவும், மாநகர பேருந்து நிலையம் அருகே வந்து எடுத்துச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால்  தனது விரிவுரைகள் ஆரம்பமாகி விட்டதாக கூறிய மாணவன், போது மீண்டும் நீர்கொழும்பு செல்வதால் கையடக்க தொலைபேசி மாவனல்லைக்கு கொண்டு வந்து கொடுப்பதாக சாரதி வாக்குறுதியளித்துள்ளார். அதற்கமைய, அவர் அதனை கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

சாரதி ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் : மகிழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவன் | Money Missing In Negombo Driver Humanity

இப்படிப்பட்ட உன்னதமானவர்கள் இன்னும் நம்மிடையே இருப்பது நமது அதிர்ஷ்டம் எனவும் இந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கையடக்க தொலைபேசியை பெற்றுக் கொண்ட மாணவனின் தந்தை பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.