இலங்கை - பங்களாதேஷ் டெஸ்ட் போட்டி! திடீரென இடைவிலகிய இலங்கை வீரர்

இலங்கை - பங்களாதேஷ் டெஸ்ட் போட்டி! திடீரென இடைவிலகிய இலங்கை வீரர்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய தினேஸ் சந்திமால் அப்போட்டியில் இருந்து திடீரென இடைவிலகியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையின் படி, தினேஸ் சந்திமாலின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மருத்துவ அவசரநிலை காரணமாக அவர் போட்டியில் இருந்து இடைவிலகியுள்ளார்.

இதேவேளை தினேஷ் சந்திமால் விரைவில் இலங்கை திரும்ப உள்ளார்.

இலங்கை - பங்களாதேஷ் டெஸ்ட் போட்டி! திடீரென இடைவிலகிய இலங்கை வீரர் | Sri Lanka Bangladesh Test Cricket Match

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 531 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மேலும் இலங்கைக்கு எதிரான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற இன்னும் 243 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.