
ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள்... தோனியை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி...
ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களுரு அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 83 ரன்கள் எடுத்தார். அவரை தவிர்த்து மற்ற வீரர்கள் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சவாலான இலக்காக இருந்தாலும் 183 ரன்களை கொல்கத்தா அணி 16.5 ஓவர்களிலேயே எட்டியது.
இந்த போட்டியில் விராட் கோலி 4 சிக்சர்களுடன் 83 ரன்கள் எடுத்திருந்தார்.
இதன் மூலம் 232 இன்னிங்ஸ்களில் 241 சிக்சர்கள் அடித்து தோனியை பின்னுக்கு தள்ளியுள்ளார் விராட் கோலி.
தோனி 218 இன்னிங்ஸ்களில் 219 சிக்சர்களை அடித்திருந்தார். அவரது ரிக்கார்டை விராட் கோலி நேற்று முறியடித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் (357 சிக்சர்), ரோஹித் சர்மா (261), டிவில்லியர்ஸ் (251) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.