வெளிநாட்டு மோகத்தால் கோடிக்கணக்கான பணத்தை இழக்கும் தமிழர்கள்

வெளிநாட்டு மோகத்தால் கோடிக்கணக்கான பணத்தை இழக்கும் தமிழர்கள்

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடமாகாணத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.

2023ஆம் ஆண்டில் 254 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் 139 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த மோசடிகள் தொடர்பில் இதுவரை 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெளிநாட்டு மோகத்தால் கோடிக்கணக்கான பணத்தை இழக்கும் தமிழர்கள் | Sri Lanka Tamil Try To Abroad Money Scammer

முகவர்களின் மோசடி குறித்து மக்கள் விழிப்படையாத வரை இவ்வாறான மோசடிகளை தடுக்க முடியாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளது.