பஞ்சு மிட்டாயில் கலக்கப்படும் இரசாயனம் : ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

பஞ்சு மிட்டாயில் கலக்கப்படும் இரசாயனம் : ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் கலந்து விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயிலேயே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஆபத்தான இரசாயனம் கலக்கப்படுவது தெரியவந்துள்ளது.

பஞ்சு மிட்டாயில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனம் சேர்க்கப்படுவதாக கிடைக்கப்பட்ட தொடர் புகார்களின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயினை சோதனை செய்தனர், அதன் முடிவில் பஞ்சு மிட்டாயில் ஆபத்தான இரசாயனம் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பஞ்சு மிட்டாயில் கலக்கப்படும் இரசாயனம் : ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Marina Beach Cancer Causing Chemical Cotton Candyதீப்பெட்டி மற்றும் ஊதுபத்தில் செய்வதற்கு பயன்படுத்தப்படும் 'ரோடமின் பி' என்ற இரசாயனம் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இரசாயனமானது வயிற்றுக்குள் சென்றால் புற்றுநோய் ஏற்படும் ஆபாயம் அதிகமாக இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

பஞ்சு மிட்டாய் ரோஸ், சிவப்பு என கண்ணை பறிக்கும் நிறத்தில் இருப்பதற்காக நிறச்சாயங்கள் பயன்படுத்தப்படுகிறது.

பஞ்சு மிட்டாயில் கலக்கப்படும் இரசாயனம் : ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Marina Beach Cancer Causing Chemical Cotton Candyஆனால் 'ரோடமின் பி' குறைந்த விலை என்பதால், இது போன்ற ஆபத்தான இரசாயனங்களை பஞ்சு மிட்டாயில் வியாபாரிகள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

எனவே பஞ்சு மிட்டாய் விற்பனையாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.