
நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி
அண்மையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்பித்து அமைச்சரவை பத்திரத்திற்கே 12.02.2024 இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் தற்போது செயல்பருத்தப்பட்டு வருகின்றன. மேற்படி வரைவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் குழு அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்கள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணையாக செய்யப்பட வேண்டும் என்பதால் திருத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.